பிரபஞ்சம் முழுவதும்
எண்களாலேயே நிறைந்துள்ளன என்பதை நாம் அறிவோமா ! எந்த ஒரு செயலையும் கணிதம் கொண்டே அறிகிறோம்.
உதாரணமாக நம் உடலில் எத்தனை கை உள்ளது, கால் உள்ளது, எத்தனை விரல்கள் உள்ளது என்பதை
அறிகிறோம், நம் வீட்டு கதவு ஒற்றை கதவா ! இரட்டை
கதவா என கணிக்கிறோம் !நம் வீட்டை சுற்றி ஒரு மரம் இருக்கிறதா ? பல மரங்கள் இருக்கின்றனவா
என அறிகிறோம் ! மேலும், நம்மை சுற்றி கண்ணுக்கு புலப்படாத உயிரினங்களான பேக்டீரியா,
வைரஸ்களையும் கூட ஒரு ஊசி முனையில் எத்தை இருக்கிறது என்பதை டிஜிட்டல் நுண்ணோக்கியின்
மூலம் அறிகிறோம், இப்படியே ஒவ்வொன்றையும் நாம் கணித அறிவு கொண்டே அறிகிறோம் !
உளகில் தோன்றிய
உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் இதை கண்டறியும் அறிவும், அதை என்ன செய்ய வேண்டும்
! எப்படி செய்ய வேண்டும் ! எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவும் உள்ளது
! அந்த அறிவை கொண்டே மனிதன் நாகரிகம் படைத்தான் ! அறிவியலில் வளர்ந்தான், எல்லையற்ற
அறிவியலை கண்டறியும் போராட்டத்தையும், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகிறான். அதில்
வெற்றி, தோல்வி என பல முனை போராட்டங்களையும், சந்தித்து வருகிறான். அப்படிபட்ட மனிதன்,
வாழ்வில் சிறப்பாக வாழவே போராடுகிறான், அதில் தோல்வி ஏற்படினும், வெற்றிக்காகவே பாடுபடுகிறான்
! இந்த வெற்றி, தோல்விக்கு இடையில் பிரபஞ்சத்தில் இயங்கும்,கோள்களின் சக்தியும் நட்சத்திரங்களின்
ஆதிக்கமும், எண்ணிய வடிவில் நம்மை ஆட்கொள்கின்றன என்பதை அறியா வண்ணம் இருக்கிறான்
! அதை விளங்கப்படுத்தவே இந்த என்கணிதம் தொடர்பான தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன,
இதை தொடர்ந்து படித்து பயன் பெற வேண்டுகிறோம் ! தொடரும்……
0 Comments